'முகப்பு', 'about' => 'எங்களைப் பற்றி', 'services' => 'சேவைகள்', 'contact' => 'தொடர்புகளுக்கு', 'homee' => 'முகப்பு', 'about_us' => 'எங்களைப் பற்றி', 'servicess' => 'சேவைகள்', 'about_dementia' => 'டிமென்ஷியா பற்றி', 'events' => 'நிகழ்வுகள்', 'media_advocacy' => 'ஊடக ஆதரவு', 'publications' => 'வெளியீடுகள்', 'how_you_can_help' => 'நீங்கள் எவ்வாறு உதவலாம்', 'gallery' => 'காட்சியகம்', 'galler' => 'காட்சியகம்', 'contacts' => 'தொடர்புகளுக்கு', 'contact_us' => 'தொடர்புகளுக்கு', 'website' => 'வலைத்தளம் & சமூக ஊடகங்கள்', 'Back' => 'மீண்டும்', 'activity_centre' => 'செயல்பாட்டு மையம்', 'address' => 'இலக்கம் 110, கெட்டவலமுல்ல ஒழுங்கை, கொழும்பு 10, இலங்கை', 'helpline' => 'தொலைபேசி', 'laf_overview' => 'LAF கண்ணோட்டம்', 'mission_objectives' => 'பணி & நோக்கங்கள்', 'founders_history' => 'நிறுவுநர்கள் & வரலாறு', 'board_of_directors' => 'பணிப்பாளர் சபை', 'international_affiliations' => 'உலகளாவிய இணைப்புக்கள்', 'testimonials' => 'சான்றுகள்', 'what_they_say' => 'அவர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்', 'memory_screenings' => 'நினைவாற்றல் பரிசோதனை', 'activity_centress' => 'செயல்பாட்டு மையம்', 'caregiver_supports' => 'பராமரிப்பாளர் ஆதரவு', 'volunteer_trainings' => 'தன்னார்வ பயிற்சி', 'awareness_programmess' => 'விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்', 'helpline_braceletss' => 'உதவி அழைப்பு & அடையாள கைக்கணிகைகள்', // Publications Section 'annual_reports' => 'வருடாந்த அறிக்கைகள்', 'annual' => 'வருடாந்த அறிக்கைகள்', 'newsletter' => 'செய்திமடல்', 'newslatters' => 'செய்திமடல்', 'books' => 'புத்தகங்கள்', 'book' => 'புத்தகங்கள்', 'laf_childrens_book' => 'டிமென்ஷியா குறித்த LAF குழந்தைகள் புத்தகம்', 'Malithi Diary Sinhala' => 'மலித்தியின் நாட்குறிப்பு (சிங்களம்)', // How You Can Help Section 'donates' => 'நன்கொடை', 'fundraises' => 'நிதி திரட்டல்', 'become_volunteer_intern' => 'தன்னார்வலர் அல்லது பயிற்சியாளராக சேருங்கள்', 'footer_rights' => '

© 2025 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை லங்கா அல்சைமர் அறக்கட்டளை | TrendZhubஆல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது

', 'terms_of_service' => 'சேவை விதிகள்', 'privacy_policy' => 'தனியுரிமை கொள்கை', 'go_to_top' => 'மேலே செல்லவும்', // home start 'about_us_heading' => 'எங்களைப் பற்றி', 'about_us_subheading' => 'லங்கா அல்சைமர் அறக்கட்டளையை அறியுங்கள்', 'about_us_description' => '2001ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லங்கா அல்சைமர் அறக்கட்டளை (LAF), சமூக சேவைகள் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். LAF என்பது இலங்கையில் அறிவாற்றல் குறைபாடு மற்றும் டிமென்ஷியா போன்ற நோயறியப்பட்டவர்களின் தேவைகளை ஆதரிப்பதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மற்றும் இன்றுவரையான ஒரே நிறுவனமுமாகும். LAF உலகளாவிய அமைப்பான Alzheimer’s Disease International (ADI) அமைப்பின் உறுப்பினராகும்; இது உலகம் முழுவதும் 100 உறுப்பினர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ADI, டிமென்ஷியா துறையில் நடைபெறும் சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றிய அறிவும் தகவலும் பகிர்ந்து, LAF உட்பட்ட அதன் உறுப்பினர்களுக்கு ஆதரவு வழங்குகிறது.', 'read_more' => 'மேலும் படிக்க', 'our_services_heading' => 'எங்கள் சேவைகள்', 'how_we_care' => 'நாங்கள் எப்படி பராமரிக்கிறோம்', 'memory_screening' => 'நினைவாற்றல்
பரிசோதனை', 'activity_centres' => 'செயல்பாட்டு
மையம்', 'caregiver_support' => 'பராமரிப்பாளர்
ஆதரவு', 'volunteer_training' => 'தன்னார்வ
பயிற்சி', 'awareness_programmes' => 'விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள்', 'helpline_bracelets' => 'உதவி அழைப்பு, கைக்கணிகைகள்', 'risk_factors_prevention' => 'ஆபத்து காரணிகள் & தடுப்பு', 'global_statistics' => 'உலகளாவிய புள்ளிவிவரங்கள்', 'sri_lanka_statistics' => 'இலங்கை புள்ளிவிவரங்கள்', 'about_dementia_heading' => 'டிமென்ஷியா பற்றி', 'what_is_dementia' => 'டிமென்ஷியா என்றால் என்ன?', 'dementia_description' => 'டிமென்ஷியா என்பது நினைவாற்றல், சிந்தனை மற்றும் தொடர்பாடலை பாதிக்கும் ஒரு மெல்ல நழுவும் நிலை ஆகும்.', 'dementia_alzheimers' => 'டிமென்ஷியா & அல்சைமர்', 'risk_factors_heading' => 'ஆபத்து காரணிகள் & தடுப்பு', 'risk_factors_description' => 'டிமென்ஷியாவிற்கு முழுமையான குணம் இல்லாவிட்டாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது ஆபத்தை குறைக்க உதவும்.', 'global_statistics_heading' => 'உலகளாவிய புள்ளிவிவரங்கள்', 'global_statistics_description' => 'உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் டிமென்ஷியாவுடன் வாழ்கிறார்கள்; அதில் அல்சைமர் நோயே மிகவும் பொதுவான வகை.', 'sri_lanka_statistics_heading' => 'இலங்கை புள்ளிவிவரங்கள்', 'sri_lanka_statistics_description' => 'இலங்கையில் தற்போது 200,000க்கும் மேற்பட்ட டிமென்ஷியா வழக்குகள் பதிவாகியுள்ளன; இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.', 'events_subheading' => 'சமீபத்திய மற்றும் வரவிருக்கும்', 'view_more' => 'மேலும் பார்க்க', 'your_name' => 'உங்கள் பெயர்', 'your_email' => 'உங்கள் மின்னஞ்சல்', 'subject' => 'தலைப்பு', 'message' => 'செய்தி', 'send' => 'அனுப்பு', // Media Advocacy Section 'media_advocacy_subheading' => 'விழிப்புணர்வு & கல்வி', // Publications 'website_social_media' => 'வலைத்தளம் & சமூக ஊடகங்கள்', 'publications_heading' => 'வெளியீடுகள்', 'laf_childrens_book' => 'டிமென்ஷியா குறித்த LAF குழந்தைகள் புத்தகம்', // How You Can Help 'how_you_can_help_subheading' => 'உங்கள் ஆதரவுடன்
மாற்றத்தை உருவாக்குங்கள்', // home end 'Footer text' => '2001ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லங்கா அல்சைமர் அறக்கட்டளை (LAF) சமூக சேவைகள் அமைச்சின் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனமாகும். இலங்கையில் அறிவாற்றல் குறைபாடு மற்றும் டிமென்ஷியா உள்ளவர்களின் தேவைகளை முன்னிறுத்தி செயல்படும் முதல் மற்றும் இதுவரை ஒரே நிறுவனம் LAF ஆகும்.', 'Laf Overview' => 'லங்கா அல்சைமர் அறக்கட்டளைப் பற்றிய கண்ணோட்டம்', 'overview' => 'லங்கா அல்சைமர் அறக்கட்டளை (LAF), ஆரம்பத்தில், 2001ஆம் ஆண்டு The Alzheimer’s & Related Disorders Foundation of Lanka என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்டது. அதன் பின்னர் 2010 ஒக்டோபர் 12ஆம் திகதி லங்கா அல்சைமர் அறக்கட்டளை என பெயர் மாற்றப்பட்டது. இது சமூக சேவைகள் அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு சமூக அடிப்படையிலான அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனமாகும். LAF என்பது இலங்கையில் அறிவாற்றல் குறைபாடு மற்றும் டிமென்ஷியா போன்ற நோயறியப்பட்டவர்களின் தேவைகளை ஆதரிப்பதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மற்றும் இன்றுவரையான ஒரே நிறுவனமுமாகும். LAF, 2002 ஒக்டோபர் 23ஆம் திகதி, உலக அமைப்பான சர்வதேச அல்சைமர் நிறுவனத்தின் {Alzheimer’s Disease International (ADI)} உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. உலகம் முழுவதும் உள்ள 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச அல்சைமர் நிறுவனமானது, டிமென்ஷியா தொடர்பான துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அறிவு மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் LAF உள்ளிட்ட அதன் உறுப்பினர் அமைப்புகளை ஆதரிக்கிறது.', 'Mission & Objectives' => 'பணி மற்றும் நோக்கங்கள் ', 'Mission' => 'குறிக்கோள்', 'Mission wording' => ' : அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா உள்ளவர்களின் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களது குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்தல்.', 'Objectives' => 'நோக்கங்கள்:', 'Objectives List' => [ 'டிமென்ஷியா மற்றும் அல்சைமர் பற்றிய நிலை குறித்து நாட்டின் பரந்த மக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்து, அபாயக் குறைப்பைப் பற்றி கல்வி வழங்குதல்.', 'நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் மதிப்பீடு மற்றும் பராமரிப்பு குறித்த சேவைகளை வழங்குதல்.', 'பயிற்சி மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.', 'ஆதரவு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுதல் மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குதல்.', ], // Founders 'Founders & History' => 'நிறுவனர்கள் மற்றும் வரலாறு', 'History text' => [ '

லங்கா அல்சைமர் அறக்கட்டளையின் பயணமானது செப்டம்பர் 1999 இல் சிங்கப்பூரில் நடைபெற்ற 2வது அல்சைமர் நோய்க்கான சர்வதேச ஆசிய பசிபிக் பிராந்திய கூட்டத்தில் இலங்கையில் அல்சைமர் சங்கத்தை அமைப்பதாக லோரன் யூ மற்றும் டெமி டெமிடிகாமா உறுதியளித்தபோது தொடங்கியது.

ஆரம்பத்தில், LAF-க்கு சொந்த அலுவலகமொன்று இருக்கவில்லையென்பதுடன், முதல் 10 வருடங்களாக நிறுவனர்களின் வீடுகளிலேயே இது இயங்கியது. ஆரம்ப காலகட்டத்தில், அமைப்பின் இணை நிறுவனர் லோரெய்ன் யூ, இலங்கையில் அதிகம் கேள்விப்படாத அல்லது புரிந்து கொள்ளப்படாத ஒரு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் முயற்சியை முன்னோக்கி எடுத்துச் செல்ல நிதி திரட்டவும் கடுமையாக பாடுபட்டார்.

தகவல் மற்றும் சேவை மையத்தை அமைக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், லோரன் யூ மற்றும் டெமி டெமிடிகாமா ஆகியோர் மையம் அமைக்கப்படும் வரை அறக்கட்டளையின் அனைத்து செலவுகளையும் தங்கள் தனிப்பட்ட நிதியிலிருந்து செலுத்த முடிவு செய்தனர். 2011 ஆம் ஆண்டு நவீன வசதிகளுடன் கூடிய சேவை மற்றும் தகவல் மையம் திறக்கப்பட்டதன் மூலம் அவர்களின் அர்ப்பணிப்பு நிறைவடைந்தபோது, இந்த நோக்கத்திற்காக அவர்கள் சுமார் 6 மில்லியன் ரூபாயை செலவிட்டிருந்தனர்.

ஆரம்ப ஆண்டுகளில், பிரியா பெர்னாண்டோவுடன் சேர்ந்து, லோரெய்ன், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கும், கொழும்பு தெற்கு மருத்துவமனை, கலுபோவில மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவற்றின் மனநல வார்டுகளுக்கும் சென்றார். டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இவர்கள் தொடர்ந்து சந்தித்து, நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பராமரிப்பு குறித்த நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்கவும் செய்தனர். பராமரிப்பாளர் ஆதரவு குழுக்கள் மாதத்திற்கு ஒரு முறை அவரது வீட்டில் கூடி, குடும்ப பராமரிப்பாளர்களுக்கு டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களை ஆதரிப்பது மற்றும் நடத்தை மற்றும் மனநிலை மாற்றங்களைக் கையாள்வது குறித்து ஆலோசனை வழங்கின. அத்தகைய பராமரிப்பாளர்கள் மத்தியில் மேலதிக விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு செய்தித்தாள் உருவாக்கப்பட்டது. பின்னாளில் இது LAF-இன் காலாண்டுக்கான செய்திமடலாக மாறியது.

2011ஆம் ஆண்டு LAF-இன் சேவை மற்றும் தகவல் மையம் அதன் தற்போதைய அமைவிடமான கொழும்பு 10, மருதானையில் திறந்துவைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட தளபாடங்கள் கடன் பெறப்பட்டவையாகவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவையாகவோ இருந்த அதேவேளை சிலவை நன்றியுள்ள குடும்பங்களின் நேரடியான நன்கொடைகளாக இருந்தன. அதன் பின்னர் வளர்ந்துவரும் சேவைகளின் பட்டியலில் செயற்பாட்டு மையமும் நினைவாற்றல் பரிசோதனையும் சேர்க்கப்பட்டன.

தன்னார்வத் தொண்டுகளை பெருமளவில் பயன்படுத்தி நிர்வாகச் செலவுகளைக் குறைந்தபட்சமாக வைத்திருக்க LAF பாடுபட்டது. லோரெய்ன் முழுநேர வேலை செய்தாலும், அவர் தனக்காக ஒருபோதும் எந்த ஊதியமோ அல்லது உதவித்தொகையோ பெற்றதில்லை. அவரால் ஆழப்பதியவைக்கப்பட்ட நிதியியல் நேர்மையும் சேமிப்பு கலாசாரமும், அதன் அர்ப்பணிப்புள்ள வழக்கமான தன்னார்வலர்களால் நடத்தப்படுகின்ற பல செயல்பாடுகள் மூலம், லங்கா அல்சைமர் அறக்கட்டளையில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

இன்று, LAF-ஆனது அது வழங்கும் சேவைகளுக்காக அறியப்படுகிறது, அங்கீகரிக்கப்படுகிறது மற்றும் மதிக்கப்படுகிறது. நிறுவனர்களின் தொலைநோக்குப் பார்வைக்கும், நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களின் சிறந்த ஆதரவுக்கும் நன்றி, இது எளிமையான தொடக்கத்திலிருந்து நீண்ட தூரம் வந்துள்ளது.

', ], 'Founder1' => 'LORRAINE YU', 'Founder2' => 'TAMI TAMITEGAMA', 'Board Members' => 'பணிப்பாளர் சபை', 'Board Members List' => [ 'பாதுகாவலர்கள்: திருமதி மஞ்சுளா மேத்யூஸ், டாக்டர் ரொமேஷ் டயஸ் பண்டாரநாயக்க மற்றும் திரு. ஷெவந்த ரோட்ரிகோ ஆகியோரும் LAF-இன் நிதி/முதலீடுகளை நிர்வகிப்பது குறித்து ஆலோசனை வழங்க தன்னார்வ அடிப்படையில் பணியாற்றுகிறார்கள்.', ], // international 'International Affiliation' => 'சர்வதேச இணைப்புக்கள்', 'International text' => [ 'சர்வதே அல்சைமர் நிறுவனம் {Alzheimer’s Disease International (ADI)} என்பது உலகம் முழுவதும் உள்ள அல்சைமர் மற்றும் டிமென்ஷியா சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு ஆகும்; உலக சுகாதார அமைப்புடன் (WHO) உத்தியோகபூர்வ உறவைக் கொண்டுள்ளது; இதில் LAF-ஆனது உறுப்பினராக உள்ளது. ADI இன் நோக்கம் என்பவை ஆபத்து குறைப்பு, சரியான நேரத்தில் நோயறிதல், பராமரிப்பு மற்றும் இன்றைய உள்ளடக்கமும் நாளைய குணப்படுத்துதலும் ஆகும்.', 'டிமென்ஷியாவை எதிர்கொள்ள உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் அளவிலான முயற்சிகள் தேவை என்று ADI நம்புகிறது. அவர்கள் அல்சைமர் மற்றும் டிமென்ஷியா அமைப்புகளை வலுப்படுத்தி, டிமென்ஷியாவை ஒரு தேசிய முன்னுரிமையாக வலியுறுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், டிமென்ஷியா உள்ளவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பு பங்காளிகளுக்கும், பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதற்கும் அவர்கள் பணியாற்றுகிறார்கள். உலகளவில், டிமென்ஷியாவில் கவனம் செலுத்தவும், அதை உலகளாவிய சுகாதார முன்னுரிமையாக தொடர்ந்து வைத்திருக்கவும், அரசுகளிடமிருந்து சிறந்த கொள்கைக்காக பிரசாரம் செய்யவும் மற்றும் டிமென்ஷியா ஆராய்ச்சியில் முதலீட்டையும் புதுமையையும் ஊக்குவிக்கவும் ADI பாடுபடுகிறது.', 'ADI 1984ஆம் ஆண்டு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் அல்சைமர் அமைப்புகளின் முயற்சியால் நிறுவப்பட்டது. ADI, 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை; பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் ஒரு உறுப்பினரை கொண்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் லாப நோக்கமற்ற அமைப்பாக இருந்து, டிமென்ஷியாவுடன் வாழும் நபர்கள், அவர்களது பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்பங்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.', 'ADI அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு. அதன் பிரதான அலுவலகம் UK-யின் லண்டனில் உள்ளது; ஆசிய-பசிபிக் பிராந்திய அலுவலகம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில்; அமெரிக்கா பிராந்திய அலுவலகம் அர்ஜென்டினாவின் புவனோஸ் ஐர்ஸில் உள்ளது. ADI-க்கு ஒரு வளர்ந்து வரும் குழுவும், உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்களால் அமைந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சபையும் உள்ளது. ', 'ADI வழங்கும் டிமென்ஷியா துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய அறிவு மற்றும் தகவல் பகிர்வின் மூலம் LAF பயனடைகிறது. ADI வெளியிட்ட 2024 ஆம் ஆண்டின் World Alzheimer Report “Global changes in attitudes to dementia” எனும் அறிக்கையில், 2019 ஆம் ஆண்டின் உலகளாவிய ஆய்வின் முடிவுகள், டிமென்ஷியா உள்ளவர்களின் தினசரி வாழ்க்கையில் களங்கம் (stigma) ஏற்படுத்தும் சிக்கலான தீங்கான விளைவுகளை காட்டியது; ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பும், டிமென்ஷியா தொடர்பான களங்கத்துடன் தொடர்புடைய தீங்குகளை சங்கங்கள் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தி அதே முடிவுக்கு வந்தது.', 'இலங்கை அல்சைமர் அறக்கட்டளைக்காக ADI ஆல் வழங்கப்பட்ட டிமென்ஷியா பற்றிய சமீபத்திய அறிவு மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் நன்மைகள் மகத்தானவை. 2024 ஆம் ஆண்டில் ADI ஆல் வெளியிடப்பட்ட உலக அல்சைமர் அறிக்கை “டிமென்ஷியா குறித்த உலகளாவிய பார்வைகளில் ஏற்படும் மாற்றங்கள்”, 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலகளாவிய கணக்கெடுப்பின் முடிவுகளைச் சுருக்கமாகக் கூறியது, இது, டிமென்ஷியா உள்ளவர்களின் அன்றாட வாழ்க்கை அதிகமாக சிக்கலானதும் சீர்குலைவதுமானதாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டறிந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, மனச்சோர்வுக்கான அடிப்படை காரணங்களை நிவர்த்தி செய்ய முடியுமா என்பதில் கவனம் செலுத்தி, இந்த கணிப்பை உறுதிப்படுத்தியது. காலப்போக்கில், மனச்சோர்வு டிமென்ஷியா உள்ளவர்களையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் பாதிக்கிறது.', ], // collaborations 'Collaborations' => 'கூட்டுப்பணிகள்', 'Collaborations subtitle' => 'களனி பல்கலைக்கழகம்', 'collaborations text' => [ 'கெலனியா பல்கலைக்கழகம் - கெலனியா பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள்', '1. டிமென்ஷியா தொடர்பான மருந்து அல்லாத அணுகுமுறைகள் குறித்து இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி', 'இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள், டிமென்ஷியாவுடன் வாழும் நபர்களையும், குழுவினரால் நடத்தப்படும் சிகிச்சை திட்டங்களையும் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை LAF நடத்துகிறது. இந்த திட்டம், மருந்துகளின் மட்டுப்படுத்தப்பட்ட பங்கையும், தூண்டுதலின் அடிப்படையிலான (stimulation-based) தலையீடுகளின் மதிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. மாணவர்கள், நோயறிதலைக் கடந்து தனிநபர்களைப் பார்த்து, முழுமையான புரிதலைப் பெறுகிறார்கள். இந்த நிகழ்ச்சி LAF-ன் பிற சேவைகள் பற்றிய விழிப்புணர்வையும் வளர்க்கிறது.
இந்த நிகழ்ச்சி தொற்று காலத்திற்கு முன் வரை Kotelawala Defence University மருத்துவ மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.', '2. பேச்சு சிகிச்சை (Speech Therapy) மாணவர்களுக்கான நடைமுறை பயிற்சி', 'இது முதலில் இறுதி ஆண்டு பேச்சு சிகிச்சை மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது; இப்பயிற்சி, செயல்பாட்டு மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு கோட்பாட்டின் அடிப்படையிலான செயல்பாடுகளை அவர்கள் நடாத்த அனுமதித்தது. அவர்களின் பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டு இறுதி தேர்வுகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்டது; வாடிக்கையாளர்களுக்கு மதிப்பீடுகள் மற்றும் முன்னேற்ற அறிக்கைகள் வழங்கப்பட்டன. 2004 முதல், 2ஆம் ஆண்டு மாணவர்களும் உணர்திறன், அவதானித்தல், மற்றும் அவ்வப்போது மையத்தின் செயல்பாடுகளில் பங்கேற்பதற்காக LAF-ற்கு வருகை தருகின்றனர்.', ], // collage 'Collage' => 'சமூக மருத்துவர்கள் கல்லூரி', 'Collage text' => [ 'LAF சமூக மருத்துவர்கள் கல்லூரியுடன் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது', 'சமூக மருத்துவர்கள் கல்லூரியுடன் இணக்கம்; அதன் தலைவர் LAF ஊடக மாநாட்டில் உரையாற்றினார்.', 'இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) மற்றும் LAF இடையே கையெழுத்தான ஒரு கூட்டு ஒப்பந்தமானது, நாட்டெங்கும் டிமென்ஷியா தொடர்பான முயற்சிகளை வலுப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. டிமென்ஷியா குறித்த அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், டிமென்ஷியாவின் தாக்கத்தைக் குறைக்க உதவும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் என இணைந்து பணியாற்றுவதற்காக, ஜூலை 1, 2024 அன்று ஒரு வருட காலத்திற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்தானது. சமூக மருத்துவர்கள் கல்லூரி என்பது இலங்கையில் பொது சுகாதார நிபுணர்களின் தலைமை தொழில்முறை அமைப்பாகும். CCPSL, அதன் பல நோக்கங்களில் ஒன்று என்ற வகையில், உயர்தர பராமரிப்பு வழங்குதல் மற்றும் பொது சுகாதார முயற்சிகளை ஊக்குவித்தல் மூலம் இலங்கை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயற்படுகிறது. இந்த கூட்டாண்மை, சமூக சுகாதாரம் மற்றும் சமூக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட குழுக்களை இலக்காகக் கொண்டு, டிமென்ஷியா குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும், மற்றும் சமூக மட்டத்தில் டிமென்ஷியா உள்ள நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை ஆதரிக்கும்.', ], // Nisewell 'Nisewell' => 'நைன்வெல்ஸ் மருத்துவமனை செவிலியர் திட்டம்', 'Nisewell text' => [ 'செவிலிய மாணவர்களுக்கும் சம்பளம் பெறும் பராமரிப்பாளர்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் நடைமுறை அனுபவம்.', 'இந்த திட்டம் செயல்பாட்டு மையத்தில் செவிலிய மாணவர்கள் மற்றும் சம்பளம் பெறும் பராமரிப்பாளர்களுக்கு வழிகாட்டுதல், அவதானித்தல் மற்றும் நேரடி செயல்பாட்டு அனுபவத்தை வழங்குகிறது. 2025ஆம் ஆண்டு, நைன்வெல்ஸ் மருத்துவமனையில் இருந்து 29 செவிலிய மாணவர்கள், 5 நாட்கள் இந்த திட்டத்தில் பயனடைந்தனார். முந்தைய ஆண்டுகளில், Durdans மருத்துவமனையின் செவிலியப் பள்ளி மற்றும் English Nursing Company க்கும் கூட இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. சேவை பெறுநர்களின் நலன் LAF-க்கு முக்கியமானதால், இந்த திட்டம் கோரிக்கை அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகிறது.', ], // services 'Services topic' => 'நினைவாற்றல் பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகள்', 'Services topic text' => [ 'நினைவாற்றல் பரிசோதனை மூலம் ஒருவரின் நினைவு, சிந்தனை, கவனம் மற்றும் கவன நீளம், மொழி மற்றும் தொடர்பாடல் திறன்கள் போன்ற மனத்திறன்களை மதிப்பிடுகிறது.', 'நினைவாற்றல் பரிசோதனைகளில் வாய்மொழி, பார்வை மற்றும் எழுத்து வடிவங்களில் பதிலளிக்க வேண்டிய சுருக்கமான கேள்விகள் இடம்பெறும். இந்த பரிசோதனை, மேலும் விரிவான ஆய்வு தேவையான நினைவாற்றல் சிக்கல்களை கண்டறியவும், இதன் மூலம் டிமென்ஷியா உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. நினைவாற்றல் குறைபாடு, டிமென்ஷியாவால் மட்டுமல்லாமல், விட்டமின் குறைபாடு, மனஅழுத்தம் அல்லது சிகிச்சையளிக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய பிற உடல்நிலை காரணங்களாலும் ஏற்படக்கூடும் என்பதால் இது முக்கியமானது', 'LAF வள மற்றும் தகவல் மையத்தில் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் காலை நேரத்தில் முன்பதிவின் அடிப்படையில் இலவச நினைவாற்றல் பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகள் நடத்தப்படுகின்றன. 076 082 7080 என்ற எண்ணை அழைத்து முன்பதிவு செய்யலாம்.', ], 'active center' => 'செயற்பாட்டு மையம்', 'active center text' => 'LAF இயல்பாக வளர்ச்சி பெற்ற ஒரு அமைப்பு. அமைப்பின் இணை நிறுவுநரும் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்தவருமான லோரெய்ன் யூ, டிமென்ஷியா உள்ளவர்களை அவர்களது வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் சந்தித்தபோது, அவர்களுக்கென ஒரு செயற்பாட்டு மையம் தேவை என்பதை உணர்ந்தார். 2011 செப்டெம்பரில் LAF தன் வள மற்றும் தகவல் மையத்தை நிறுவிய பின்னர், 2012 ஜனவரியில் செயல்பாட்டு மையம் தொடங்கப்பட்டது.', 'active center text2' => [ 'செயல்பாட்டு மையத்தில் டிமென்ஷியா உள்ளவர்களுக்கு கலை மற்றும் கைத்தொழில் அமர்வு மற்றும் பாடல் இணை அமர்வு நடைபெறுகிறது.', 'இந்த மையம், டிமென்ஷியாவுடன் வாழும் நபர்களுக்காக பாதுகாப்பான, மதிப்பீடில்லாத மற்றும் ஊக்கமளிக்கும் சூழலை வழங்குகிறது. இங்கு பணியாற்றும் தன்னார்வலர்களின் குழு, சமூக தொடர்புகளை ஊக்குவிப்பதுடன் சிகிச்சை சார்ந்த செயல்பாடுகளிலும் அவர்களை ஈடுபடுத்துகிறது. இச்செயல்பாடுகள் அறிவாற்றல் செயற்பாட்டைத் தக்கவைத்து, டிமென்ஷியா உள்ளவர்களின் நலனையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகின்றன. இந்த திட்டம் பராமரிப்பாளர்களின் பொறுப்புச் சுமை மற்றும் அழுத்தத்தை குறைப்பதன் மூலம் அவர்களுக்கும் ஆதரவளிக்கிறது. செயற்பாட்டு மையத்தில் சேவையைப் பெறும் நபர் “வாடிக்கையாளர்” என அழைக்கப்படுகிறார்; இருப்பினும், இந்த சேவைகளுக்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பல குடும்பங்கள் ஆரம்ப நிலையிலேயே உதவியை நாடாததால், மையத்திற்கு வருபவர்கள் பெரும்பாலும் டிமென்ஷியாவின் முதல் கட்டத்தை கடந்தவர்களாக இருப்பார்கள். செயற்பாட்டு மையம் சேவையின் தரத்தில் கவனம் செலுத்தி, சிறந்த சேவை வழங்கும் முன்மாதிரி மையமாக செயல்படுகிறது. ஆகவே ஒரு நாளில் அதிகபட்சம் 20 வாடிக்கையாளர்களை மட்டுமே இம்மையம் ஏற்றுக்கொள்ள முடியும்.', ], 'active center text3' => [ 'செயற்பாடுகள்:', 'LAF, வாடிக்கையாளர்களுக்கு நபர்-மைய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. வாடிக்கையாளர்களின் நிலை காலப்போக்கில் மாறுவதால், அதிகபட்சமாக பங்கேற்க உதவும் வகையில் செயற்பாடுகள் சீரமைக்கப்படுகின்றன.', 'உடல் சிகிச்சை - வாடிக்கையாளர்கள் மென்மையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.', 'அறிவாற்றல் சிகிச்சை - இதில் வாடிக்கையாளர்கள் புதிர்கள், சொல் தேடல்கள், நினைவு விளையாட்டுகள், நினைவுகூரல், கைஎழுத்து போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.', 'படைப்பாற்றல் செயற்பாடுகள் - இதில் வாடிக்கையாளர்கள் ஓவியம், பிற கலை மற்றும் கைவினைப் பணிகள், இசை மற்றும் நடனம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.', 'சமூக செயற்பாடுகள் - இதில் வாடிக்கையாளர்கள் குழு செயற்பாடுகள், பலகை விளையாட்டுகள், கலந்துரையாடல்கள், கதை சொல்லல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.', 'செயற்பாட்டு மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் என்பவற்றை வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பிற தேசிய நிகழ்வுகளும் சிகிச்சைத் திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டாடப்படுகின்றன.', ], 'when' => 'எப்போது:', 'when text' => 'ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.00 முதல் 1.00 வரை (பொது விடுமுறை நாட்களைத் தவிர)', 'who' => 'யாரால்:', 'who text' => [ 'செயற்பாட்டு மையம் வழக்கமான தன்னார்வலர்களின் குழுக்களால் நடத்தப்படுகிறது; ஆரம்ப உணர்திறன் மிக்க பயிற்சிக்குப் பிறகு, மூத்த தன்னார்வலர்களின் ஆதரவுடன் அவர்கள் நேரடியாக செயற்படுகின்றனர். பின்னர் காலமுறைப்படியான பயிற்சி நிகழ்ச்சிகளும், தகவல் மற்றும் அறிவு பகிர்வின் மூலம் சுயகற்றல் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. தன்னார்வலர்களின் மாறுபட்ட பணியனுபவங்கள் எம்மால் வழங்கப்படும் சேவைகளுக்கு மேலதிக மதிப்பை சேர்க்கின்றன. இத்தன்னார்வலர்கள் படிப்படியாக LAF-ன் மற்ற செயற்பாடுகள் மற்றும் நிகழ்வுகளுக்கும் ஆதரவளித்து, LAF குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறுகின்றனர்.', 'செயற்பாட்டு மையத்தில் இணைவது பற்றிய தகவல்களை LAF அலுவலகத்தில் பெறலாம்.', ], 'caregiver' => 'பராமரிப்பாளர் ஆதரவு', 'caregiver text' => [ 'பராமரிப்பாளர் ஆதரவு குழு கூட்டங்கள் 2022 ஜூனில் Zoom வழியாக மீண்டும் தொடங்கப்பட்டன. மாதந்தோறும் 1ஆம் மற்றும் 3ஆம் செவ்வாய்களில் மாலை 7.30 முதல் 8.30 வரை நடைபெறும் இந்த கூட்டங்களை மருத்துவ நிபுணர் வழிநடத்துவதுடன், LAF அமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் இதில் இணைந்து செயற்படுகின்றனர். ஆதரவு குழுக்கள், ஒரே போன்ற அனுபவங்களை எதிர்கொண்டு வரும் நபர்களை ஒன்றிணைக்கின்றன. தமது குடும்ப உறுப்பினர்கள் செயல்பாட்டு மையத்தில் கலந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும் , அனைத்துப் பராமரிப்பாளர்களுக்கும் தனிப்பட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளவும், சமாளிக்கும் உத்திகளைக் கற்றுக்கொள்ளவும், நோயைப் பற்றி நேரடியாக மேலும் அறிந்து கொள்ளவும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் அவர்களுக்கு அதிகார உணர்வையும், சூழ்நிலையின் மீதான கட்டுப்பாட்டையும் அளிக்கிறது. இந்தத் திட்டம் வழங்கும் உணர்வுப்பூர்வமான ஆதரவு, மிகவும் தேவைப்படும் ஒரு இடைவெளியையும் நிரப்புகிறது. பராமரிப்பாளர் மீதான பெரும் சுமை தெளிவாகத் தெரிவதால், பராமரிப்பாளரின் உடல் மற்றும் மன நலத்தைப் பேணுவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.', ], 'training' => 'தன்னார்வலர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள்', 'training text' => [ 'செயற்பாட்டு மையம் ஆரம்பத்தில், மனப்பூர்வமான ஈடுபாடு கொண்ட சில தன்னார்வலர்களுடன் இயங்கியதுடன் அவர்கள் இணை நிறுவனர் லோரெய்னின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து செயல்பட்டனர். ஆரம்பத்தில், செயற்பாட்டு மையம் புதன்கிழமைகளில் மட்டுமே ஒரு நாள் செயல்பட்டது. தேவை அதிகரித்ததால், அது திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கும் விரிவடைந்தது.', 'அமைப்பு வளர்ந்தபோது, ​​உள்ளக நடைமுறைகளை முறைப்படுத்தும் பணி தொடங்கியது. செயற்பாட்டு மையத்தில் நிகழ்ச்சிகளை நடத்தும் வழக்கமான தன்னார்வலர்கள், தங்கள் பணியை இன்னும் சிறப்பாக செய்வதற்கு அதிக ஆதரவு தேவைப்பட்டது. இதனால், வழக்கமான தன்னார்வலர்களுக்கான தன்னார்வலர் பயிற்சித் திட்டம் 2014 அக்டோபரில் தொடங்கப்பட்டது. அப்போதிருந்து ஆண்டுதோறும் குறைந்தது ஒரு நிகழ்ச்சியாவது நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் இது போன்ற சேவைகளை வழங்கும் வேறு எந்த அமைப்பும் இல்லாததால், உள்நாட்டில் பொருத்தமான வளவாளர்களை கண்டறிவதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. ', "டிமென்ஷியா தொடர்பான தலைப்புகள் இந்தத் திட்டத்தில் ஒரு வழக்கமான அங்கமாக இருப்பதுடன், தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வையும் நினைவூட்டும் பயிற்சியையும் அளிக்கின்றன. இதில் உள்ள சில தலைப்புகள்: அறிவாற்றல் தூண்டுதல் சிகிச்சை {Cognitive Stimulation Therapy (CST)}, 'டிமென்ஷியா உள்ளவர்களுடன் வாழ்வதும் அவர்களைப் பராமரிப்பதும்' (டிமென்ஷியா இயக்கத்தில் முனைப்புடன் செயல்படும் ஒருவரால் நடத்தப்படுவது), 'மூளை எவ்வாறு செயல்படுகிறது', 'முதியோருக்கான ஊட்டச்சத்து' மற்றும் 'முதியவர்களுக்கு உடல்ரீதியான ஆதரவை வழங்குதல்'.", 'இந்த பயிற்சி திட்டம் தன்னார்வலர்கள் LAF-க்கு வழங்கும் பெரும் பங்களிப்பைப் பாராட்டும் ஒரு வாய்ப்பாகவும் செயல்படுகிறது. ஆகவே, இயக்குநர்கள் வாரியத்துடன் நேரம் செலவிடும் பகுதியும் இதில் இடம்பெறுகிறது.', 'பயிற்சி பணிமனை தன்னார்வலர்கள் - 2024', ], 'awareness program' => 'விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்', 'awareness program text' => 'தேசிய அளவில் வலியுறுத்தலுக்கான தனது பொறுப்பின் கீழ், இலங்கை மற்றும் உலகில் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோயின் குறிப்பிடத்தக்க பரவல், அதன் எச்சரிக்கை அறிகுறிகள், ஆபத்துக் காரணிகள், ஆபத்தைக் குறைப்பதற்கான வழிகள் மற்றும் LAF வழங்கும் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை LAF நடத்துகிறது. பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கதைப் புத்தகங்கள் போன்ற படைப்பு வடிவங்கள், பல்வேறு குழுக்களுக்கான உரைகள், பயிற்சிப் பட்டறைகள், மெமரி வாக் மற்றும் அல்சைமர்ஸ் ரன் போன்ற வருடாந்திர நிகழ்வுகள், வளப் பொருட்கள், விளம்பர நிகழ்வுகள், அத்துடன் பிரதான மற்றும் இணைய ஊடகத் தொடர்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, டிமென்ஷியா குறித்த கல்வி பல்வேறு வழிகள் மற்றும் ஊடகங்கள் மூலம் வழங்கப்படுகிறது.', 'helpline ID' => 'உதவி அழைப்புகள் மற்றும்அடையாளக் கைப்பட்டைகள்', 'helpline ID text' => [ 'டிமென்ஷியா தொடர்பான தகவல்கள், எங்கள் சேவைகள் மற்றும் கிடைக்கும் ஆதரவைப் பற்றிய விசாரணைகளுக்கு உதவ,LAF உதவி அழைப்பு 011 266 7080 உள்ளது. மேலும் தேசிய உதவி அழைப்பு 1926 என்ற எண்ணும் உள்ளது.', 'LAF அடையாளக் கைப்பட்டைகளையும் வழங்குகிறது. இவை, குறிப்பாகத் தனியாக அலைந்து திரியும் பழக்கம் உள்ள டிமென்ஷியா நபர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. அந்த அடையாளக் கைப்பட்டையில், சம்பந்தப்பட்ட நபரின் பெயரும், அலைந்து திரிந்த பிறகு அவர் "காணாமல் போனவராக" கண்டறியப்பட்டால் அழைக்கப்படக்கூடிய ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது பராமரிப்பாளரின் தொலைபேசி எண்ணும் இடம்பெற்றிருக்கும்.', ], // demasia 'Dementia about' => 'டிமென்ஷியா பற்றி', 'Dementia text' => [ 'டிமென்ஷியா & அல்சைமர் நோய்', 'டிமென்ஷியா என்றால் என்ன?', 'மூளைக்கு ஏற்படும் பாதிப்பால் நினைவு, சிந்தனை மற்றும் தொடர்பாடலை பாதிக்கும் மெல்ல நழுவும் நிலை டிமென்ஷியா ஆகும். காலப்போக்கில் மனநிலை, தன்மை மற்றும் நடத்தையில் மாற்றங்களையும் இது உண்டாக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல; அறிவாற்றல் குறைவு ஏற்படுத்தும் பல்வேறு கோளாறுகளுக்கான பொதுப் பெயராகும். ஒருவருக்கு டிமென்ஷியா எனத் தீர்மானிக்க, குறைந்தது இரண்டு முக்கிய மூளை செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட வேண்டும். அவை நினைவிழப்பு, மொழி மற்றும் தொடர்பாடல் சிரமம், கவனம் குறைவு, தீர்ப்பு சக்தி குறைவு அல்லது சுற்றியுள்ள சூழலைப் புரிந்து கொள்ளும் சிக்கல்கள் ஆகியவை.', 'வயது அதிகரிக்கும் போது டிமென்ஷியா அதிகமாக காணப்படினும், அது முதிர்வின் இயல்பான பகுதி அல்ல. காலப்போக்கில் டிமென்ஷியா உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது; 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 5% பேருக்கும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 20% பேருக்கும் இது காணப்படுகிறது.', 'டிமென்ஷியாவின் ஆபத்தை உயர்த்தும் பல காரணிகள் உள்ளன: புகைபிடித்தல், அதிக மது அருந்தல், ஆரோக்கியமற்ற உணவு, சமூகத் தனிமை, கேள்வித் திறன் குறைவு மற்றும் மன செயல்பாட்டின்மை. உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், மனச்சோர்வு போன்ற மருத்துவ நிலைகளும் காரணிகளாகும். உடற்பயிற்சி இல்லாததும் அதிக ஆபத்தை உருவாக்குகிறது. உலக சுகாதார அமைப்பின் படி, இந்த ஆபத்து காரணிகளை குறைக்கும் நடவடிக்கைகள் அறிவாற்றல் குறைவு ஏற்படும் வாய்ப்பை குறைக்க உதவும்.', 'Alzheimer’s Disease International', 'டிமென்ஷியாவின் வகைகள்', 'LAF இயற்கையாக வளர்ந்த அமைப்பு. நிறுவனர் லோரெய்ன் யூ, டிமென்ஷியா உள்ளவர்களை அவர்களின் வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் சந்தித்த போது செயல்பாட்டு மையத்தின் தேவை இருப்பதை உணர்ந்தார். 2011 செப்டெம்பரில் LAF தனது வள மற்றும் தகவல் மையத்தை நிறுவிய பின், 2012 ஜனவரியில் செயல்பாட்டு மையம் தொடங்கப்பட்டது.', 'அல்சைமர் நோய் டிமென்ஷியாவின் மிகச் சாதாரணமான வகையாகும்; இது 60% முதல் 80% வரை வழக்குகளுக்கு காரணமாகிறது. இது பல ஆண்டுகளாக மெதுவாக வளர்கிறது, ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று குறுகிய கால நினைவில் சிரமம் (உதாரணமாக ஒரு அறையில் ஏன் நுழைந்தீர்கள் அல்லது நேற்று யார் வந்தார்கள் என்பதை மறந்து விடுதல்). காலப்போக்கில் இது காரணமிடல், மொழி மற்றும் தினசரி செயல்பாடுகளை பாதிக்கும். ஆண்களை விட பெண்கள் அல்சைமருக்கு அதிக வாய்ப்புடையவர்கள். தற்போது இதற்கு முழுமையான குணம் இல்லாவிட்டாலும், ஆரம்பத்தில் கண்டறிதல் நோய் உள்ளவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அறிகுறிகளை சிறப்பாக கட்டுப்படுத்தவும், அவர்களும் குடும்பமும் நோயை புரிந்து எதிர்காலத் திட்டங்களை அமைக்கவும் உதவுகிறது.', 'வாஸ்குலார் டிமென்ஷியா இரண்டாவது பொதுவான வகையாகும்; இது பெரும்பாலும் ஆண்களிடம் காணப்படுகிறது. மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால் இது ஏற்படுகிறது; பக்கவாதம் அல்லது சிறிய பக்கவாதங்களின் தொடர் காரணமாக இது உருவாகலாம். சில நேரங்களில் இது அல்சைமர் நோயுடன் சேர்ந்து காணப்படுகிறது.', 'லூயி பாடி டிமென்ஷியா என்பது மூளை செல்களில் அசாதாரண புரத சேர்மங்கள் தேக்கமடைவதால் ஏற்படுகிறது. இது நினைவிழப்பு, குழப்பம், இயக்கத்தில் சிரமம் போன்ற அறிகுறிகளை உருவாக்குகிறது. இந்த வகை டிமென்ஷியா கொண்டவர்கள் பார்கின்சன் நோயில் காணப்படும் தசை கடினம் மற்றும் நடையில் சிரமம் போன்ற அறிகுறிகளையும் காட்டலாம். இது அல்சைமரைவிட விரைவாக மோசமடைவதுடன், அறிகுறிகள் தொடங்கிய பிறகு சராசரி வாழ்நாள் சுமார் ஏழு ஆண்டுகள் ஆகும்.', 'முன்பக்க/கால பகுதி (Frontotemporal) டிமென்ஷியா பெரும்பாலும் 40 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களை பாதிக்கிறது; இளம் வயதினரிடம் காணப்படும் முக்கிய காரணமாகும். மூளையின் முன்பக்க மற்றும் கால பகுதியிலுள்ள நரம்பு செல்கள் இழப்பதால் இது ஏற்படுகிறது; இதனால் தன்மை மாற்றங்கள், பொருந்தாத சமூக நடத்தை, மொழி சிரமங்கள் ஏற்படும். சில சமயங்களில் இயக்கச் சிக்கல்கள் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சனைகளும் உருவாகலாம். நோய் கண்டறிந்த பின் வாழ்நாள் 2 முதல் 15 ஆண்டுகள் வரை மாறுபடும்.', 'மதுபானம் தொடர்பான டிமென்ஷியா நீண்ட காலமாக அதிக அளவில் மது அருந்துவதால் ஏற்படும் அறிவாற்றல் குறைவின் மற்றொரு வடிவம். Korsakoff’s syndrome எனப்படும் நிலை குறுகிய கால நினைவையும் தன்மை மாற்றங்களையும் ஏற்படுத்தலாம். ஆனால் ஒருவர் குடிப்பழக்கத்தை நிறுத்தி, உணவுத்தரத்தை மேம்படுத்தி, விட்டமின் கூடுதல்கள் எடுத்தால் நோய் முன்னேற்றத்தை நிறுத்த முடியும்.', 'ஆரம்ப-வயது டிமென்ஷியா', '65 வயதுக்கு முன் டிமென்ஷியா உருவாவதை ஆரம்ப-வயது டிமென்ஷியா என்று அழைக்கப்படுகிறது. சிலரிடம் 40 அல்லது 50 வயதுகளிலேயே அறிகுறிகள் தோன்றக்கூடும். அல்சைமர் நோயே பொதுவான காரணமாக இருந்தாலும், இந்த வகையில் மரபணுக் காரணிகள் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பு அதிகம்; பின்னர் ஏற்படும் டிமென்ஷியாவை விட இது வேகமாக முன்னேறும்.', 'மூலங்கள்: Shorter Oxford Textbook of Psychiatry; SL Association of Geriatric Medicine – Dementia holistic approach; ICD 10; ADI International; WHO வழிகாட்டி “Risk reduction of cognitive decline and dementia”; LAF செய்திமடல்கள்', ], 'Risk main' => 'ஆபத்து காரணிகள் & தடுப்பு', 'Risk main topic' => 'ஆபத்து காரணிகள் & தடுப்பு', 'Risk Topic' => [ 'தடுப்பு மற்றும் மேலாண்மை', 'டிமென்ஷியாவிற்கு முழுமையான குணம் இல்லாவிட்டாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது ஆபத்தை குறைக்க உதவும். சமச்சீர் உணவு, மனத்திலும் உடலிலும் செயல்பாடுடன் இருப்பது, சமூக தொடர்புகளை பராமரிப்பது, நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைகளை கட்டுப்படுத்துவது ஆகியவை முக்கியமான படிகள். நினைவிழப்பு அல்லது அறிவாற்றல் சிக்கல்கள் தோன்றினால், ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை பெறுவது அறிகுறிகளைச் சிறப்பாக மேலாண்மை செய்யவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவும்.', 'ஆபத்து காரணிகள்', ], 'Global statistics' => 'உலகளாவிய புள்ளிவிவரங்கள்', 'Global statistics main' => 'உலகளாவிய புள்ளிவிவரங்கள்', 'Global statistics topic' => [ 'உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் டிமென்ஷியாவுடன் வாழ்கிறார்கள்; அதில் அல்சைமர் நோயே மிக பொதுவான காரணமாகும். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் சுமார் இரட்டிப்பாகும் என கணிக்கப்படுகிறது; 2030இல் 82 மில்லியன் மற்றும் 2050இல் 152 மில்லியன் ஆகும்.', 'ADI அறிவித்த சமீபத்திய சர்வதேச ஆய்வின் முக்கிய கண்டறிதல்கள்:', '65% சுகாதாரம் மற்றும் பராமரிப்பு துறையினர் டிமென்ஷியா என்பது முதிர்வின் சாதாரண பகுதி என்று தவறாக நம்புகின்றனர்.', 'பொது மக்களிலுள்ள 80% பேர் டிமென்ஷியா என்பது முதிர்வின் இயல்பான பகுதி என்று நம்புகின்றனர்; இது 2019இல் 66% இருந்ததை விட மிக அதிகம்.', 'டிமென்ஷியாவுடன் வாழும் நபர்களில் 88% பேர் பாகுபாடு எதிர்கொள்கிறார்கள் என்று கூறுகின்றனர்.', 'உலகளவில் நான்கில் ஒரு பகுதியை மீறும்ோர் டிமென்ஷியாவைத் தடுப்பதற்கு எதுவும் செய்ய முடியாது என்று தவறாக நம்புகின்றனர்; இது 2019இல் 20% இருந்து குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் 37% ஆக உயர்ந்துள்ளது.', 'டிமென்ஷியாவிற்கு நோயை மாற்றக்கூடிய சிகிச்சை கிடைத்தால், பராமரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களில் 90% க்கும் அதிகமானோர் நோயறிதலைப் பெற ஊக்கமடைவார்கள் என்று கூறினர்.', 'பொது மக்களிலுள்ள 58% க்கும் அதிகமானோர், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக டிமென்ஷியா ஏற்படுகிறது என்று நம்புகின்றனர்.', ], 'Sri Lanka Statistics' => 'இலங்கை புள்ளிவிவரங்கள்', 'Sri Lanka Statistics main' => 'இலங்கை புள்ளிவிவரங்கள்', 'Sri Lanka Statistics topic' => [ 'இலங்கையில் தற்போது டிமென்ஷியா தொடர்பான 200,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன; வேகமாக முதிரும் மக்கள்தொகை காரணமாக இந்த எண்ணிக்கை 2050இல் சுமார் 460,000 வரை உயரலாம். டிமென்ஷியா சமூக, பொருளாதார அல்லது இன எல்லைகளால் கட்டுப்படுவதில்லை.', 'இலங்கையில் மேற்கொண்ட ஆய்வுகள், அரை நகர்ப்புற மற்றும் புறநகர் மக்கள்தொகையில் டிமென்ஷியா பரவல் சுமார் 4% என்று காட்டுகின்றன; இது தென் ஆசியாவின் பிற பகுதிகளை விட அதிகம். 2020இல் அல்சைமர் மற்றும் டிமென்ஷியா காரணமான மரணங்கள் 6,939 ஆக இருந்தன; இது மொத்த மரணங்களில் 5.98% ஆகும். வயது சரிசெய்த மரண விகிதம் 100,000 மக்களுக்கு 27.62 ஆக உள்ளது; இந்த புள்ளிவிவரத்தில் இலங்கை உலகில் 14வது இடத்தில் உள்ளது, மேலும் தென் ஆசிய சராசரி (100,000க்கு 9.48) ஐ விட அதிகம். டிமென்ஷியாவின் மொத்த நிகழ்வு விகிதம் இலங்கையில் மிக உயர்ந்தது (100,000க்கு 84.32), இது உலக சராசரி மதிப்பீடு (100,000க்கு 93.52) ஐவிட சற்றே குறைவானது. மூலம்: AI பல ஆய்வுகளை ஒருங்கிணைத்து தொகுத்தது.', ], 'Donate' => 'நன்கொடை', 'How help' => 'நீங்கள் எவ்வாறு உதவலாம்', 'Donate topic' => [ 'நீங்கள் நன்கொடை வழங்கலாம்', 'லங்கா அல்சைமர் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி அல்லது ஒரு மரபுச்சொத்தை வழங்கி அதன் பணிகளை ஆதரிக்கலாம்.', 'காலாண்டு நன்கொடைகள் செலுத்த உங்கள் வங்கிக்கு Standing Order வழிமுறைகளை வழங்கலாம் அல்லது லங்கா அல்சைமர் அறக்கட்டளை பெயரில் செக் எழுதி, 110 Ketawalamulla Lane, Colombo 10, Sri Lanka என்ற முகவரிக்கு அஞ்சலிடலாம்.', 'அறக்கட்டளையின் வங்கி விவரங்கள்:', 'முகவரி: National Development Bank Plc, Havelock Town Branch, 117 Havelock Road, Colombo 5, Sri Lanka.', 'கணக்கு எண்: 106110117418', 'Swift Code: NDBSLKLX', ], 'fundraise' => 'நிதி திரட்டல்', 'fundraise topic' => [ 'நிதி திரட்ட உதவுங்கள்', 'எங்கள் திட்டங்களை ஆதரிக்க முதன்மை வருமான வழியாக சமூகத்திலிருந்து தொடர்ச்சியாக நிதி திரட்டும் முயற்சியை LAF தொடர்கிறது. Pledge Donation Appeal மூலம் ஆர்வமுள்ள நன்கொடையாளர்களிடம் நேரடி வேண்டுகோள்களை அளிக்கிறது. எங்கள் விசுவாசமான அனுசரணையாளர்களுக்கும் நல்வாழ்த்தாளர்களுக்கும் LAF நன்றியுள்ளதுடன், தொடர்ச்சியான ஆதரவே எங்கள் சேவைகள் மற்றும் திட்டங்களை தக்கவைத்துக் கொண்டு, அமைப்பின் பணியை வெற்றிகரமாக்குகிறது என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறது. தொண்டு இசை நிகழ்ச்சிகள், அனுசரணைகள், நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் விற்பனை ஆகியவை பயன்படுத்தப்படும் வழிகளில் அடங்கும்.', 'Memory Shop-இல் ஆடை தொழில்துறையிலிருந்து நன்கொடையாக பெற்ற புதிய உடைகள் மற்றும் பிற பரிசு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. Memory Shop மற்றும் விற்பனைக்கு தனது நேரமும் சக்தியும் வழங்கும் சரோஜ் அமலீயன் அவர்களுக்கு LAF நன்றியுடன் இருக்கிறது. மேலே கூறிய எந்த செயல்பாட்டிலும் பங்களிக்க அல்லது பங்கேற்க விரும்பினால் 0112667082 / 0112667084 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.', ], 'volunteer' => 'தன்னார்வம்', 'volunteer topic' => [ 'தன்னார்வலர் அல்லது பயிற்சியாளராக சேருங்கள்', 'எங்கள் செயல்பாட்டு மையத்தில் டிமென்ஷியா உள்ளவர்களுடன் பணியாற்ற நிரந்தர தன்னார்வலராக விரும்பினால் அல்லது எங்களால் நடத்தப்படும் குறிப்பிட்ட செயல்பாடு/நிகழ்ச்சிக்கு உங்கள் நிபுணத்துவத்தை வழங்க விரும்பினால், அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.', 'மாணவர்களுக்கு செயல்பாட்டு மையத்தை ஆதரிக்க தன்னார்வமாக சேரவும், சில வரம்பில் எங்கள் திட்டங்கள் அல்லது வெளிச்சேர்ப்பு நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளராக பயிற்சியாளராக பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளன.', ], ];